செவ்வாய், 15 நவம்பர், 2016

கான் கல்விக்கழகம் ( கான் அகாடமி) ஒரு அறிமுகம்

கான் கல்விக்கழகம் ( கான் அகாடமி) என்பது    வணிக நோக்கமற்ற கல்வி நிறுவனமாகும். இதன் முக்கிய நோக்கம் "இலவசமாக உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும், எங்கும் தருவதாகும். கான் கல்வி நிறுவனம், கணிதம், அறிவியல், கலைபுலம், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பொருண்மைகளை உள்ளடக்கிய கல்விச் சார்ந்த, 8658 காணொலிகளை ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ( தமிழக அரசின் தன்னாட்சி நிறுவனம் ), வெற்றிவேல் அறக்கட்டளை மற்றும் கான் கல்விக் கழகத்துடன் இணைந்து, மும்முனை புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையில்,  சிறப்பு கவனத்துடன் ஆங்கிலத்தில் உள்ள காணொலிகளை, தமிழிக்கு மொழிபெயர்ப்பு செய்து, தமிழ் ஒலி வடிவம் அளித்து, தமிழ் கல்விக் காணொலிகளை உருவாக்கி வருகிறது. உலக தமிழர்கள் அனைவரும், உலக தரமானக் கல்வியை பெற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகம் கான் கல்விக் கழக காணொலிகளுக்கு தமிழ் ஒலி வடிவம் அளித்து வருகிறது.

இதுவரையிலும், 43 மணி நேரம் ஒட கூடிய கல்வி சார்ந்த கான் காணொலிகளை, தமிழுக்கு மொழிமாற்றம் செய்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகத்தில் உள்ள, தமிழை தாய் மொழியாய் கொண்டுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. https://www.youtube.com/user/KhanAcademyTamil

மேலும், கல்வி கற்கும் முறையை மேம்படுத்திடும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் வழங்கப்பட உள்ளது.

தொடர்புக்கு :

திரு. மா. தமிழ்ப்பரிதி
மாநில ஒருங்கிணைப்பாளர் கணித்தமிழ்ப்பேரவை மற்றும் உதவி இயக்குநர்
7299397766

திரு. சிவ .தினகரன்
ஆய்வு தகமையர்
7871336611

திரு. வ .கெளதமராஜன்,
ஆய்வு வளமையர்
9003573957

இந்த காணொலி திட்டத்தில் பங்கேற்ற விரும்புவர்கள் அழைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக